தமிழ் சினிமா

விக்ரமின் கருடாவுக்கு முன்பு மற்றொரு படம்: இயக்குநர் திரு

ஸ்கிரீனன்

விக்ரமை நாயகனாக வைத்து இயக்கவிருந்த 'கருடா' படத்துக்கு முன்பு மற்றொரு படம் இயக்கவிருப்பதாக திரு அறிவித்துள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இருமுகன்'. செப்டம்பர் 8-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து திரு இயக்கத்தில் உருவாகவிருந்த 'கருடா' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருந்தார் விக்ரம். ஆனால், அப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வாலும் விலகினார்.

இந்நிலையில், 'கருடா' படம் தொடங்க தாமதமாகும். அதற்கு முன்பு மற்றொரு வித்தியாசமான கதை இயக்கவிருப்பதாக இயக்குநர் திரு அறிவித்துள்ளார். இதனால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

தற்போது 'சிங்கம் 3' படத்தை இயக்கிவரும் ஹரி, அப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்தவுடன் விக்ரமுடன் 'சாமி 2' பண்ணவிருக்கிறார். இதனால் 'சாமி 2' தொடங்குவதற்கு தாமதமாகும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT