தமிழ் சினிமா

கே.விஸ்வநாத்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது: கமல் நெகிழ்ச்சி

ஸ்கிரீனன்

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு மத்திய அரசு தாதா சாஹேப் பால்கே விருது அறிவித்துள்ளதற்கு கமல் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு (87) திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் அறிவித்தார்.

இயக்குநர் கே.விஸ்வநாத் 19.2.1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். இவர் தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்துள்ளது குறித்து, "என்னுடை கே.விஸ்வநாத்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்துள்ளது. அவர் பணிவானவர். அதனால், விருது பெற்றது குறித்து 'நான் அதிர்ஷ்டசாலி' எனக் கூறுவார். ஆனால், உண்மையென்னவென்றால், இந்தியர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். நானும் ஓர் அதிர்ஷ்டசாலி. உங்கள் புகழ் என்னுடையது. எனது புகழ் தங்களுடையது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்.

SCROLL FOR NEXT