சிம்பு பிறந்தநாளன்று கண்டிப்பாக 'வாலு' படம் வெளியாகும் என இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம், வி.டி.வி.கணேஷ் நடிப்பில் நீண்ட காலங்களாக தயாராகி வரும் படம் 'வாலு'. தமன் இசையமைக்க, விஜய் சந்தர் இயக்கி வந்தார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
2012 நவம்பரில் வெளியான 'போடா போடி' படத்திற்குப் பிறகு, சிம்பு நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. 'வேட்டை மன்னன்', 'வாலு' உள்ளிட்ட படங்கள் தயாராகி வந்தாலும், படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் இயக்குநர் விஜய் சந்தர், " சிம்புவின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நானும் சிம்புவும் படத்தினை முடிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் தயாரிப்பாளருக்கு பணச்சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
அப்பிரச்னை சில நாட்களில் முடிந்துவிடும். பாடல்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியிருக்கிறது. டிசம்பர் மாதம் இசை வெளியீடு முடித்து, படம் சிம்பு பிறந்த நாளன்று (பிப்.3) கண்டிப்பாக வெளியாகும்.” என்று தெரிவித்திருக்கிறார்.