தமிழ் சினிமா

குற்றம் 23-க்கு ஷங்கர் பாராட்டு: நெகிழ்ச்சியில் அறிவழகன்

ஸ்கிரீனன்

'குற்றம் 23' பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளதால், இயக்குநர் அறிவழகன் நெகிழ்ச்சியில் இருக்கிறார்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மஹிமா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'குற்றம் 23'. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

மார்ச் 2-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அறிவழகன். 'குற்றம் 23' பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர், "இயக்குநர் அறிவழகன் மிகுந்த சிரத்தையுடன் இத்திரைப்படத்தை அனைத்து வகையிலும் மிகவும் விறுவிறுப்பானதாக உருவாக்கியுள்ளார். அருண் விஜய் சிறப்பாக நடித்துள்ளார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் பாராட்டுக்கு அறிவழகன், "எனது குருவிடமிருந்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி. உங்களிடம் உதவி இயக்குநராக நான் சேர்ந்த முதல் நாளைப் போன்று இன்றும் நெகிழ்ச்சியடைந்தேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT