'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
விஷ்ணு விஷால், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராம்குமார் இயக்கிய படம் 'முண்டாசுப்பட்டி'. 2014ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். 'மாவீரன் கிட்டு' மற்றும் முருகனாந்தம் கூட்டணியில் உருவாகும் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இப்படத்துக்கு தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே முடிவாகவில்லை.