தமிழ் சினிமா

அமீர் - ஆர்யா இணையும் சந்தனத்தேவன்

ஸ்கிரீனன்

அமீர் இயக்கத்தில் ஆர்யா - சத்யா இருவரும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'சந்தனத்தேவன்' என பெயரிடப்பட்டுள்ளது.

'ஆதிபகவன்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார் இயக்குநர் அமீர். சமீபகாலமாக தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

அமீர் கூறிய கதை ஆர்யா மற்றும் அவருடைய தம்பி சத்யா இருவருக்கும் பிடித்துவிடவே இருவருமே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள். அமீர் இயக்குவது மட்டுமன்றி தயாரித்து, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.

'சந்தனத்தேவன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 'பட்டதாரி' படத்தில் நாயகியாக நடித்த அதிதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதவுள்ளார்.

ஆர்யா - சத்யா இருவரும் மாட்டை அடக்குவது போன்று போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் "அடங்க மறு... அத்து மீறு... திமிறி எழு... திருப்பி அடி... மண்ணை நேசி...மனிதனாக இரு... " என்று போஸ்டரில் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், 'செங்கொடி மறவனின் கதை' என்றும் போஸ்டர் வடிவமைப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT