தமிழ் சினிமா

காலா பர்ஸ்ட் லுக் வெளியீடு: தமிழ் திரையுலகினர் வரவேற்பு

ஸ்கிரீனன்

ரஜினியின் 'காலா' பர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்கு, தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். மே 28-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

'காலா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'காலா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும், படக்குழுவுக்கும் தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில:

சிவகார்த்திகேயன்: தலைவா மாஸ். வாழ்த்துகள் ரஞ்சித் அண்ணா. 'காலா' மகிழ்ச்சி!

குஷ்பு: சூப்பர்ஸ்டார் அவர்களின் அற்புதமான தோற்றம். எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.

வெங்கட்பிரபு: செம. வாழ்த்துகள் ரஞ்சித்.

விக்னேஷ் சிவன்: அருமை. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்

அர்ச்சனா கல்பாத்தி: மரண மாஸ். 'காலா' குழுவினருக்கும், தனுஷுக்கும் வாழ்த்துகள்

பாடலாசிரியர் விவேக்: ரஜினி அவர்கள் கண்களில் இருக்கும் சக்தி, சந்தோஷ் நாராயணன், ரஞ்சித், தனுஷ் என அவரது குழுவிடம் இருக்கும் சக்தியும் (தெரிகிறது)

தன்ஷிகா: மாஸ் லுக். வாழ்த்துகள்

சாந்தனு: இதைவிட சிறப்பாக எதாவது இருக்க முடியுமா? சூப்பர்ஸ்டார் என்பதற்கு இதுவே காரணங்கள். பெரும் மகிழ்ச்சி

கலையரசன்: வாழ்த்துகள் ரஞ்சித் அண்ணி. அருமையான பர்ஸ்ட் லுக்

ஆதிக் ரவிச்சந்திரன்: சூப்பர் ஸ்டார், தலைவர், காலா, காலா கரிகாலன், பாட்ஷா மறுபடியும் வந்துவிட்டார். நீங்கள் வாங்க தலைவா!

சாம் ஆண்டன்: என் தலைவன், வெறி ஏத்துது. கடவுளைப் பார்ப்பது போல. வெறுப்பவர்கள் வேறு வேலையை பாருங்கள். என் தலைவன் வந்துட்டான்

ஆதவ் கண்ணதாசன்: சும்மா ஸ்டைலா, லோக்கலா, மாஸா, சூப்பரா நம்ம சூப்பர் ஸ்டார் காலா.

SCROLL FOR NEXT