தமிழ் சினிமா

ஜூன் 17-ல் வெளியாகிறது அம்மா கணக்கு

ஸ்கிரீனன்

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலா பால், ரேவதி நடித்திருக்கும் 'அம்மா கணக்கு' திரைப்படம், ஜூன் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.

'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிடப்பட்டு, இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.

இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி இருக்கிறார். ஏப்ரல் 22ம் தேதி இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' வெளியாகும் தினத்தில் 'அம்மா கணக்கு' படத்தை வெளியிட திட்டமிட்டது. ஆனால், இறுதிகட்ட பணிகள் முடியாததால் படத்தின் வெளியீட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், 'அம்மா கணக்கு' ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT