'ஐ', 'காவியத்தலைவன்' ஆகிய படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'காவியத்தலைவன்' பாடல்களைத் தொடர்ந்து 'ஐ' பாடல்கள் வெளியானது. இரண்டு ஆல்பங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலைக் கூட பாடவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் பாடவில்லை என்பதற்கான தகவலை 'காவியத்தலைவன்' இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டுள்ளார். அதில், " கண்டிப்பாக என் இசையமைப்பில், நான் பாட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன, என் இசையை ஒழுங்காக பண்ணினால் போதும் என்று கூறியிருக்கிறார் ரஹ்மான்.
'என்னோடு நீ இருந்தால்' என்ற பாடலைப் பாட முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டதாகவும், பிறகு 'கடல்' படத்தில் 'அடியே.. ' பாடலைப் பாடிய சித்தார்த் ஸ்ரீராமிற்கு ரசிகர்கள் மத்தியில் போதிய அளவிற்கு கவனிப்பு கிடைக்கவில்லை. ஆகையால், 'என்னோடு நீ இருந்தால்' பாடலை ஸ்ரீராமிற்கு கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.
அப்பாடல் ஹிட்டானால், அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும். அதனால் தான் நான் பாடவில்லை. அவருக்கு கிடைக்கவேண்டியதை நான் பிடிங்கிக் கொள்ளக்கூடாது இல்லையா பாலன்? என்று வசந்தபாலனிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார்.