செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவன் இசையமைக்க இருக்கிறார்.
'இரண்டாம் உலகம்' படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் தனது அடுத்த படத்தில் சிம்புவை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இப்படத்தினை வருண் மணியன் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்க இருக்கிறது. இப்படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' கூட்டணி என்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.
அதுமட்டுமன்றி, இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் இப்படத்தின் பாடல்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். பிரிந்த நண்பர்கள் மீண்டும் இப்படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.
சிம்பு - த்ரிஷா - செல்வராகவன் - யுவன் என வெற்றிக் கூட்டணி இணைந்திருப்பதால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும் எனப்படுகிறது.