அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையே அவர் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் இந்நிறுவனம் மூலம் சர்வதேச நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
துபாய், அபுதாபி, பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர், இப்போது மலேசியாவில் நடக்கும் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே அவருடைய புதிய படம் பற்றி அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது, இதில் அவர் ஜோடியாக 2 பேர் நடிக்க இருக்கின்றனர். ஸ்ரீலீலா ஒரு நாயகியாகவும், மற்றொரு நாயகியாக ரெஜினா கஸண்ட்ரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித்தின் ‘விடா முயற்சி’படத்தில் ரெஜினா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.