தமிழ் சினிமா

கவண் வசூல், காட்சிகள் அதிகரிப்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி

ஸ்கிரீனன்

'கவண்' படத்தின் வசூல் மற்றும் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிவுள்ள படம் 'கவண்'. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்துள்ளார்.

மார்ச் 31-ம் தேதி வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம், தாங்களே நேரடியாக விநியோகம் செய்துள்ளது. தணிக்கையில் 'யு' சான்றிதழ், வரிச்சலுகை என அனைத்துமே 'கவண்' படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளில் 3.1 கோடி வசூல் செய்திருப்பதாகவும், இரண்டாவது நாளில் பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படம் முதல் வாரத்தில் சுமார் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் எனவும், மொத்தமாக தமிழக திரையரங்கிலிருந்து மொத்தமாக தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு ஷேராக வரும் என்று முன்னணி விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

இப்படத்தை நேரடியாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் விநியோகம் செய்திருப்பதால் மட்டுமே, இந்தளவுக்கு பணம் வசூல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

விஜய் சேதுபதி படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை 'கவண்' எட்டும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT