தமிழ் சினிமா

பிராந்திய மொழிப் படங்களுக்கு வரிவிலக்கு தேவை: தயாரிப்பாளர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

பிராந்திய மொழிப் படங்களுக்கு வரிவிலக்கு தேவை, பிற மொழிப் படங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்று தென்னிந்தியாவின் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு ரூபாய் 100க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 18% வரியும் , ரூபாய் 100க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28% வரியும் கட்ட வேண்டி இருக்கும். வருகிற சனிக்கிழமை முதல் ஜிஎஸ்டி அமலாகவுள்ள இந்நிலையில் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது.

அதன் படி பிராந்திய மொழி படங்களுக்கு வரிவிலக்கு அளித்தும் , பிற மொழி படங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை.

வெளிநாட்டுப் படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம். ஜிஎஸ்டி தற்போது உள்ள லட்சக்கணக்கான மிகச்சிறந்த சினிமா துறையினரைப் பாதிக்கும் என்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

ஜிஎஸ்டி வரி தயாரிப்பாளர்களை எந்த அளவில் பாதிக்கும் என்பதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் நடிகர் / தயாரிப்பாளர் கமல்ஹாசனும் அதில் கையெழுத்திட்டுள்ளார்.

SCROLL FOR NEXT