தமிழ் சினிமா

ஜில்லாவிற்கு யூ சான்றிதழ்

ஸ்கிரீனன்

விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ஜில்லா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

விஜய், மோகன்லால், காஜல், சூரி மற்றும் பலர் நடிக்க, நேசன் இயக்கியிருக்கும் படம் 'ஜில்லா'. இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

'யூ' சான்றிதழால் சந்தோஷமடைந்திருக்கும் படக்குழு, தற்போது முதல் பிரதியை தயார்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை படத்தின் இரண்டு டீஸர்கள் மட்டுமே யூ-டியூப் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. டிரெய்லர் இன்னும் வெளியாகவில்லை.

ஜனவரி 10ம் தேதி வெளிவரும் என்று அனைவரும் கூறி வந்தாலும், படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தின் முதல் பிரதி தயாரான உடன் டிரெய்லர், விளம்பரங்கள் என களத்தில் தீவிரமாக இறங்க தீர்மானித்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT