தமிழ் சினிமா

வீரம் ரீமேக்: முக்கிய வேடத்தில் இயக்குநர் மகேந்திரன்

ஸ்கிரீனன்

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'வீரம்' ரீமேக் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார் முன்னணி இயக்குநர் மகேந்திரன்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இயக்குநர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் ஒரு படம் இயக்குவது குறித்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் மகேந்திரன்.

இந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கட்டமராயுடு'. ஸ்ருதிஹாசன், நாசர் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்தில் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'வீரம்' ரீமேக் தான் 'கட்டமராயுடு' என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT