தமிழ் சினிமா

சூர்யாவா கார்த்தியா?

செய்திப்பிரிவு

'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களின் இயக்குனர் கோகுல் அடுத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார்.

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தினை கணக்கில் கொண்டு வெளியானது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. விஜய் சேதுபதி, பசுபதி, நந்திதா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள படத்தினை நகைச்சுவை இழையோட இயக்கியிருந்தார் கோகுல்.

படத்தின் வித்தியாசமான விளம்பரங்கள், டிரெய்லர்கள், விஜய் சேதுபதியிக்கு இருக்கும் ஓப்பனிங் என படம் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் கலெக்‌ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது.

குடிக்க வேண்டாம் என்பதினை ஜாலியான கதையாக்கி அதனை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக்கி இருக்கிறார் கோகுல். படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் மதன்கார்க்கி.

தற்போது படத்திற்கு இருக்கும் ஒப்பனிங்கப் பார்த்து, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கோகுல் இயக்கத்தில் அடுத்த படத்தினை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்றாலே நாயகன் கார்த்தி அல்லது சூர்யா தான். கோகுல் இயக்கத்தில் நடிக்கப் போவது கார்த்தியா சூர்யாவா என்பது வெளியாகும்.

SCROLL FOR NEXT