தமிழ் சினிமா

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பஞ்சதந்திரம் 2

ஸ்கிரீனன்

கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் 'பஞ்சதந்திரம் 2' படத்தில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

கமல்ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'பஞ்சதந்திரம்'. தேவா இசையமைத்த இப்படத்தை கமல் மற்றும் கிரேசி மோகன் இருவரும் இணைந்து எழுதியதை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். பி.எல்.தேனப்பன் தயாரித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மனைவிகளுக்குத் தெரியாமல் கணவர்கள் சுற்றுலா செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை முழுக்க காமெடியாக பண்ணியிருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

தங்களை ஏமாற்றி சுற்றுலா சென்ற கணவர்களை மனைவிகள் பழிவாங்குவது போன்று 2ம் பாகத்துக்கான கதையை எழுதி கே.எஸ்.ரவிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் கமல். விரைவில் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT