சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'சி 3' திரைப்படம் 6 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி வெளியான படம் 'சி 3'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஹரிக்கு படக்குழு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்க சங்கிலி பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், இன்று (பிப்.15) காலை சொகுசுக் கார் ஒன்றை பரிசாக வழங்கினார் சூர்யா.
இந்நிலையில், "சி-3 திரைப்படம் பண்டிகை நாளன்றி சாதாரண நாளில் வெளியாகி, 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது" என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.