தமிழ் சினிமா

மகேஷ்பாபு - சரத்குமார் இணையும் புதிய தெலுங்குப் படம்

செய்திப்பிரிவு

கொரட்டாலா சிவா இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மகேஷ்பாபுவும், சரத்குமாரும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் 'ஸ்பைடர்'. ரகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் செப்டம்பர் வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் கொரட்டாலா சிவா இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க மகேஷ்பாபு தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதில் மகேஷ்பாபுவின் தந்தையாக நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. நடிகர்கள், நடிகை, பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் சரத்குமார் தற்போது 'அடங்காதே', 'ரெண்டாவது ஆட்டம்', 'சென்னையில் ஒருநாள் 2' என மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT