வெங்கட்பிரபுவின் ட்விட்டினால் 'பிரியாணி' படத்தில் அஜித், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்த 'பிரியாணி' படத்தினை இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நாளை (டிசம்பர் 20) இப்படம் வெளியாகி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் இப்படத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
இந்நிலையில், நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் தளம் மூலம் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார்.
இன்று காலை, "தல ரசிகர்களே.. நாளை கொண்டாட தயாராக இருங்கள். 'வீரம்' படத்தின் இசை வெளியீட்டிற்காக மட்டுமல்ல.. 'பிரியாணி' ;)))))" என்று வெங்கட்பிரபு ட்வீட்டினார்.
இதனால் அஜித் ரசிகர்கள், 'பிரியாணி' படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டுமன்றி, ஒரு ரசிகர் "எதற்காக தல பெயரை உங்களது படத்தை விளம்பரப்படுத்த உபயோகிக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு "படம் பாத்துட்டு சொல்லுங்கள்" என்று பதிலளித்துள்ளார் வெங்கட்பிரபு.
வெங்கட்பிரபுவின் இந்த பதிலால், 'பிரியாணி' படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறாரா, அல்லது அஜித் படத்தின் காட்சிகளை 'பிரியாணி'யில் உபயோகப்படுத்தி இருக்கிறாரா என்பது நாளைக்கு தெரியவரும்.