தமிழ் சினிமா

கைவிடப்பட்ட பாஸ் (எ) பாஸ்கரன் 2

ஸ்கிரீனன்

ராஜேஷ் இயக்கத்தில் தயாராக இருந்த 'பாஸ் (எ) பாஸ்கரன் 2' படம் கைவிடப்பட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்த படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'. ஆர்யா தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மாபெரும் வரவேற்பு பெற்று, வசூலையும் வாரிக் குவித்தது.

ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படுதோல்வியைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வெற்றியை ருசிக்க 'பாஸ் (எ) பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக அறிவித்தார். இப்படத்தை மீண்டும் ஆர்யா தயாரித்து, நடிக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் தற்போது 'பாஸ் (எ) பாஸ்கரன் 2' திரைப்படம் கைவிடப்பட்டதாக இயக்குநர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து, "பாஸ் (எ) பாஸ்கரன் 2 படம் பண்ணவில்லை. ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிக்கும் வேறு ஒரு புதிய கதையை இயக்க இருக்கிறேன். ஆர்யா தயாரிக்க இருக்கிறார்" என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT