தமிழ் சினிமா

சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகும் கள்ளன்

ஸ்கிரீனன்

சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடித்திருக்கும் 'கள்ளன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் அமீர் வெளியிட்டார்.

கரு. பழனியப்பன், கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், செளந்தரராஜா, ரெஜின், 'பருத்தி வீரன்' முருகன், நிகிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கள்ளன்'. புதுமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

கே இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு தேனி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவுற்றது. தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்வைத்து 'கள்ளன்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் அமீர் மற்றும் ராம் ஆகியோர் வெளியிட்டார்கள். இறுதிகட்ட பணிகள் முடிவு பெறுவதையொட்டி படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT