தமிழ் சினிமா

தொடங்கியது சிம்பு - கெளதம் மேனன் படப்பிடிப்பு!

ஸ்கிரீனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

'வீரம்' படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தினை இயக்குவார் கெளதம் மேனன் என்று முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். அப்படத்தினையும் 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பார் என்று கூறினார்கள்.

இந்நிலையில் சிம்பு நடிக்கும் படத்தினை கெளதம் மேனன் இயக்கி வருவதாக இன்று காலை இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து விசாரித்ததில், “ஆம்.. உண்மை தான். அஜித் படம் பிப்ரவரி மாதம் முதல் தான் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு முன்னதாக சிம்பு நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பினை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.

ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று தெரியவில்லை” என்று கூறினார்கள்.

சிம்பு படத்தினை விரைவில் முடித்துவிட்டு, அதற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன். சிம்பு - கெளதம் மேனன் இருவருக்குமே குறுகிய காலத்தில் தயாராகும் படம் இதுவாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

SCROLL FOR NEXT