தமிழ் சினிமா

தமிழில் ரீமேக்காகும் எக்கடிக்கி போதாவு சின்னவாடா

ஸ்கிரீனன்

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’எக்கடிக்கி போதாவு சின்னவாடா' படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் இயக்கத்தில் நிகில் சித்தார்த், ஹேபா பட்டேல், நந்திதா, அவிகா கோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எக்கடிக்கி போதாவு சின்னவாடா'. சேகர் சந்திரா இசையமைத்த இப்படத்துக்கு சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உறுதிசெய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சிபிராஜ் ஆகியோர் 'எக்கடிக்கி போதாவு சின்னவாடா' படத்தை பார்த்துள்ளனர். இவர்களில் யார் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்கள் என்பதை விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

மேலும், தமிழ் ரீமேக்கை 'எக்கடிக்கி போதாவு சின்னவாடா' தயாரிப்பாளரான பி.வி.ராவுடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT