தமிழ் சினிமா

உறுதியானது விஷால் - ஹரி கூட்டணி!

ஸ்கிரீனன்

'தாமிரபரணி' படக் கூட்டணியான விஷால் - ஹரி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘பாண்டியநாடு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். லட்சுமி மேனன், ஜெகன், சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தினை திரு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷால் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தை நடித்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். இப்படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘நான் சிகப்பு மனிதன்’ குறுகிய கால தயாரிப்பு தான். ஏப்ரல் 2014ல் இப்படம் வெளிவர இருக்கிறது. அப்படத்தினைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தில் நடிப்பார் விஷால். இப்போதே தீபாவளி 2014ல் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT