தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வரும் மார்ச் 5-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் உயர் நீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி நீதிபதி எஸ். ராஜேஸ் வரன் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. இதில் ஒரு தலைவர், இரண்டு துணைத்தலைவர்கள், இரண்டு கவுரவ செயலாளர்கள், ஒரு கவுரவ பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்காக வேட்புமனுக்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 8 ம் தேதி மாலை 6 மணிக்கு சங்க அலுவலகத்தில் வெளியிடப்படும்.
தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
தேர்தல் குறித்த அறிவிப்புடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற் குழு எடுத்த தீர்மானத்தில் விஷால் தற்காலிக நீக்கம் செல்லுபடியாகும் என்று உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. செயற்குழு எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப் படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செயற்குழு எடுத்த முடிவில் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் நடவடிக்கையும் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.