தமிழ் சினிமா

பஞ்சு அருணாசலம் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

செய்திப்பிரிவு

பஞ்சு அருணாசலம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்ட பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அதில், ‘‘பஞ்சு சார்.. உங்களது இழப்பை ஈடுசெய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT