சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
'டார்லிங்' படத்தைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. ஆனந்தி, சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சில இருப்பதால் 'U/A' சான்றிதழ் அளித்தார்கள்.
தணிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம், இப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது.