இளையராஜா இசையமைத்தது எதற்காக? என்று எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் கங்கை அமரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸ் குறித்து கங்கை அமரனிடம் கேட்ட போது, "இது மிகவும் தவறு. என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார், எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.ராமநாதன் சொன்னார்களா?
எதற்கான ஆசை இது? ஆசையை விட்டெறிந்துவிட்டு போக வேண்டியது தானே. இதற்குமேலும் சம்பாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்?. இதனை வியாபாரம் ஆக்க கூடாது. ஏற்கனவே வியாபாரம் ஆக்கி சம்பளத்தை வாங்கிவிட்டோம்.
10 பேர் நம்மை பின்பற்றி பாடுகிறார்கள் என்றால், என்னை பின்பற்றாதே, பாடாதே என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்கள் பாடல்கள் போட்டதே, மக்கள் பாடுவதற்குத் தான். ஆனால், பாடாதே என்று சொன்னால், இசையமைத்தது எதற்காக?" என்று கோபமாக தெரிவித்தார்.