'சைவம்' படத்தில் பாடகர் உன்னி கிருஷ்ணன் மகள் உத்தாரா பாடகியாக அறிமுகம்.
'தலைவா' படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் விஜய், இயக்கி வரும் படம் 'சைவம்'. 'திங்க் பிக் ஸ்டூடியோ' என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரித்தும் வருகிறார் இயக்குநர் விஜய்.
இப்படத்தில் 'தெய்வத்திருமகள்' சாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பணிகள் தொடங்கி, காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக பாடகர் உன்னி கிருஷ்ணன் மகள் உத்தாரா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அவர் பாடும் முதல் பாடல் இது. குழந்தைக்கும் சேவலுக்கும் இடையேயான பாசப்பிணைப்பைச் சொல்லும் கதை என்பதால், குழந்தை பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, உத்தாராவை பாட வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஏற்கனவே, 'சைவம்' படத்தின் போஸ்டர் டிசைன் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.