'வை ராஜா வை' படத்திற்காக 40 பேர் அடங்கிய குழு சிங்கப்பூர் சென்றிருக்கிறது. அங்குள்ள சொகுசு கப்பலில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'வை ராஜா வை'. யுவன் இசையமைக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் முதன் முறையாக இயக்குநர் வஸந்த், கெளதம் கார்த்திற்கு அப்பாவாக நடித்திருக்கிறார். டாப்ஸி மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் கெளரவ தோற்றத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள். அங்குள்ள சொகுசு கப்பலில் ஒரு பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதற்காக 40 பேர் அடங்கிய குழு சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.