விஷால் நடித்து வரும் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு 30 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட சர்ச் செட் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள்.
'பாண்டியநாடு' படத்திற்கு பாராட்டு உற்சாகத்தில் தனது அடுத்த படமான 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் விஷால்.
லட்சுமி மேனன், சுந்தர்ராம், ஜெகன் மற்றும் பலர் விஷாலுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முழு நீள காதல், ஆக்ஷன், திரில்லராக இப்படம் தயாராகிறது.
இப்பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் உருவாகியுள்ளார். வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீலம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளார்.
“ஏலேலோ மெதப்பு வந்திருச்சி...” என்ற இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணீர் சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ‘சர்ச்’ செட் போடப்பட்டது.
திடீரென உருவான இந்த ‘சர்ச்’-ஐ பார்க்க அக்கம் பக்கத்து ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். எனவே இந்த பாடல் முடிந்ததும் போடப்பட்ட ‘சர்ச்’ செட்டை அதை அப்படியே 2014 புத்தாண்டு வரை விட்டுவிட படபிடிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளார்கள். இப்பாடலை ஷோபி நடனம் அமைக்க 250 நடன கலைஞர்களுடன் விஷால், ஜெகன், சுந்தர் நடனம் ஆடினார்கள். பாடலின் மற்றொரு பகுதியை இயற்கை சூழ்ந்த இடத்தில் படமாக்குகிறார்கள்.