'தலைமுறைகள்' படத்தைப் பார்த்துவிட்டு, பாலுமகேந்திரா மற்றும் சசிகுமாரை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
பாலுமகேந்திரா நடித்து இயக்கி இருக்கும் படம் 'தலைமுறைகள்'. இளையராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்தினை சசிகுமார் தயாரித்திருக்கிறார்.
தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் 'தலைமுறைகள்' படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் படத்தினைப் பார்த்துவிட்டு, பல்வேறு முன்னணி நடிகர்களும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரத்யேகமாக படத்தை பார்த்த ரஜினி, பாலுமகேந்திரா மற்றும் சசிகுமாரை தொலைபேசியில் அழைத்து பாராட்டி இருக்கிறார். இருவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.