தமிழ் சினிமா

குடும்ப சொத்து பிரச்சினை: போலீஸில் நடிகர் கார்த்திக் புகார்

செய்திப்பிரிவு

குடும்ப சொத்து பிரச்னையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி கொடுக்கும்படி நடிகர் கார்த்திக் தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் கார்த்திக்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் இடங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் வசித்து வருகிறார் நடிகர் கார்த்திக். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற கார்த்திக், 'சொத்து பிரச்னையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி கொடுக்குமாறு' ஒரு மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "நடிகர் கார்த்திக் புகார் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளையும் கேட்டிருக் கிறோம். அதன் பின்னரே அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றனர்.

SCROLL FOR NEXT