புதுமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'வாயை மூடி பேசவும்' மற்றும் 'ஓ காதல் கண்மணி' ஆகிய தமிழ்ப் படங்களில் நாயகனாக நடித்திருப்பவர் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து தமிழில் படங்களில் நாயகனாக நடிக்கக் கதைகள் கேட்டு வந்தார் துல்கர் சல்மான்.
தற்போது புதிதாக புதிய தமிழ்ப் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர் சல்மான். புதுமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ளது.
கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, தீன தயாள் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.