செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடக்க விழாவில், தனக்காக ஒரு பாடலை சமர்பித்த தனுஷிற்கு நன்றி தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 4ம் ஆண்டு தொடக்க விழா மும்பையில் தொடங்கியது. இதை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைத்தார். மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் இவ்விழா நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றார்கள்.
இவ்விழாவில் சென்னை ரைனோஸ் அணி சார்பில், அணியின் கேப்டன் விஷால், ஜிவா, விக்ராந்த், ஜித்தன் ரமேஷ், சாந்தனு உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றார்கள். அவ்விழாவில் சச்சினுக்காக ஒரு பாடலைப் பாடி, அப்பாடலை அவருக்கு சமர்ப்பித்தார் தனுஷ்.
தனுஷிற்கு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் சச்சின். அதுமட்டுமன்றி 'சச்சின் கீதம்' மியூசிக் வீடியோவையும் நினைவு கூர்ந்தார்.