தமிழ் சினிமா

ஆகஸ்ட் 25-ல் வெளியாகிறது வா டீல்

ஸ்கிரீனன்

ரத்தின சிவா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வா டீல்' ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

ரத்தின சிவா இயக்கத்தில் அருண்விஜய், கார்த்திகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா, நடன இயக்குநர் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'வா டீல்'. தமன் இசையமைத்த இப்படத்தை ஃபெதர் டச் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்ட அனைத்தையும் முடித்து பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது பட வெளியீடு முடிவு செய்யப்பட்டு இறுதியில் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தற்போது ஆகஸ்ட் மாத வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். அதன்படி படமும் தணிக்கை செய்யப்பட்டு 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 25-ம் தேதி 'வா டீல்' வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஒருவழியாக பட வெளியீடு இறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT