'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், 'இணைய விமர்சகர்கள்' குறித்து நடிகை சுஹாசினி தெரிவித்த கருத்து, சமூக வலைதள சினிமா ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
''ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமையுண்டு. ஏனென்றால், அவர்களுக்கு அனுபவம் உள்ளது; தகுதி இருக்கிறது. அதனால் பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்யலாம்.
ஆனால், இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்" என்றார் சுஹாசினி.
நடிகை சுஹாசினியின் இந்தப் பேச்சு, இணையவாசிகளின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் 'சுளுக்' 'சுருக்' பதிவுகளாக இட்டு, அவருக்கு எதிராக ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில நமது இன்றைய #ட்வீட்டாம்லேட்-டில்...
விமலாதித்த மாமல்லன் @maamallan - சினி பத்திரிகையாளர்களைப் போலவே ஸ்டார் சினி-விமர்சனப் பதிவர்களுக்கும் விருந்தோம்பல் உண்டென்பது தெரியாதா சுஹாசினி? #கவர் பண்ணுங்க
கானா பிரபா @kanapraba - இன்னிக்கு ஒரு படம் பார்க்கலாம்னு இருக்கேன் சுஹாசினி மேடம் கிட்ட அனுமதி வாங்கிடணும் முதல்ல.
அறிதுயிலன் @iKaruppuu - விமர்சனம் பண்ணக்கூடாதா! ஜெயா டிவில கால்மேல கால்போட்டு உட்கார்ந்த நிகழ்ச்சிய நான்கூட விமர்சன நிகழ்ச்சின்னு நம்பிட்டேனேப்பா! #சுஹாசினி
சி.சரவணகார்த்திகேயன் @writercsk - விமர்சனம் போல் சினிமா பார்க்கவும் எல்லோருக்கும் தகுதி இல்லை என சுஹாசினி அறிவிக்கலாமே!
தமிழ்ப்பறவை @Tparavai - சினிமாவுக்கு விமர்சனம் எழுத மத்தவங்களுக்கு உரிமை இல்லை-சுஹாசினி. #என்ன கொமாரு.... பயப்படுறியா.....???!!!!
Dr பட்டர் கட்டர் @Butter_cutter - மவுஸ் யூஸ் பண்ணத்தெரிஞ்சவன் எல்லாம் விமர்சனம் பண்ணக்கூடாது - சுஹாசினி #கீ போர்டு பழகிறதுக்கு டியூசன் எடுப்பாங்க போல!
சுபாஷ் @su_boss2 - பத்திரிகைகாரர்களை நம்பிதான் நாங்க இருக்கோம். மத்தவங்களை எழுத விடாதீங்க-சுஹாசினி#அப்படினா படத்தை CDபோட்டு பத்திரிகைகாரங்ககிட்டயே வித்துடுங்க.
சி.சரவணகார்த்திகேயன் @writercsk - மணிரத்னத்தின் 'தி இந்து' பேட்டி நிறைகுடமாய்த் தான் இருக்கிறது. சுஹாசினி தான் கூத்தாடுகிறார்.
ஆப்பாயில் @SenthilUdaya - ஓகே கண்மணி போலாமானு யோசிச்சா இந்த சுஹாசினி டயலாக்லாம் காதுல கேக்குமேன்ற பயம் தான் வந்து போகுது...#யம்ம்மோ
Parthiban Shanmugam @hollywoodcurry - ஆனா அவங்கெல்லாம் உறைக் ✉ கொடுத்ததான் விறைப்பா விமர்சனம் எழுதுவாங்க...
சௌம்யா @arattaigirl - விமர்சனம் என்பதில் பாராட்டும் அடங்கும் தானே!?
புத்திகாலி @Tottodaing - என்னது, படத்த விமர்சனம் பண்ணக்கூடாதா..... படம் பிடிக்கலேன்னா எழுந்து போயிடுங்கன்னு சொன்ன பினிஷிங் குமாரே பரவால்ல போல!
திகில்-நாவு @Thiru_navu - பத்தாம் வகுப்பிலே நான்தான் ஃபர்ஸ்ட்டு! இந்த #OKகண்மணி படம் பார்க்காமலே விமர்சனம் எழுதலாமா? விடுவாங்களா?
நிலா ரசிகன்! @RaittuVidu - "விமர்சனம் எழுதத் தெரிஞ்சவங்க தான் விமர்சனம் எழுதணும்!" - சுஹாசினி!
நல்லபடம் எடுக்க தெரிஞ்சவன் தான் படம் எடுக்கணும்னு நாங்க மணிய சொல்லலாமா?
Tamil VJ Profiles @tamilvjfans11 - Mrs.மணிரத்னம் அவர்களுக்கு, விமர்சனம் எழுத தகுதியுள்ளவர்கள் மட்டுமே ஓ.கே கண்மனி திரைப்படத்தை பார்க்க அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
புகழ் @mekalapugazh - அஞ்சானுக்கு லிங்குசாமி மாதிரி... ஓகே கண்மணிக்கு சுகாசினி போல..
கிருஷ்குமார் @iKrishS - சுகாசினி புண்ணியத்துல #OKKANMANIக்கு எந்தமாதிரி இணைய விமர்சனம் வரப்போகுதுன்னு தெரிஞ்சுப்போச்சு.
ஜப்பான் ரகு @japan_raghu - சுஹாசினி " #Qualified " டிரிங்கர்ஸ் மட்டும்தான் டாஸ்மாக் போகனும்னு சொல்லல.
Alex Pandian @AxPn - கத்துகிட்ட மொத்த வித்தையையும் சுஹாசினி கரெக்டா ஒருவாரம் முன்னர் இறக்கிட்டாங்க போல #ஓகேகண்மணி - பாவம் மணி/ப்ரொட்யூசர்
Saa Naa @sanasumu - படத்தை விமர்சனம் செய்யக்கூடாதுன்னா நீங்க உங்க ஹோம் தியேட்டரில் ரிலீஸ் பண்ணி உங்க ஹோம் ஆளுங்களை மட்டும் பார்க்க சொல்லுங்க சுகாசினி மேடம்
JagaKV @jagakv - அலைபாயுதே படத்தை அப்பவே போதுமான அளவுக்கு விமர்ச்சித்து விட்டதால் மீண்டும் இப்ப யாரும் விமர்ச்சிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் #சுகாசினி
RAJU @GOVINDARAJEN - அவனை கவுன்சிலருக்கு நிக்க வச்சி நீ மட்டும் ஓட்டு போடு மொமெண்ட்..#சுகாசினி