தமிழ் சினிமா

ஜூலை முதல் வாரத்தில் அமெரிக்கா செல்கிறார் ரஜினி

செய்திப்பிரிவு

‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்த், ஜூலை முதல் வாரத்தில் அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது. அங்கு தொடர்ந்து 10 நாட்கள் தங்கி ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பிய அவர், தமிழக விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்தார். இந்த சந்திப்புகள் அவரது அரசியல் பிரவேசத்தை மேலும் உறுதி செய்வதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வரும் 24-ம் தேதி தொடங்கவுள்ள ‘காலா’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது தரப்பில் விசாரித்தபோது, “ரஜினிகாந்த் தற்போது ‘காலா’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்கிறார். 24-ம் தேதி தொடங்கும் இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார். சில தினங்கள் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்துகொள்கிறார். இதை முடித்துக்கொண்டு மீண்டும் ஜூலை 12-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்” என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT