'8 தோட்டாக்கள்' படத்தில் தனக்கு வலுவான கதாபாத்திரம் கொடுத்ததிற்காக தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் '8 தோட்டாக்கள்'. வெள்ளபாண்டியன் தயாரிப்பில் உருவான இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ளது.
குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். தனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை அளித்த இயக்குநர் ஸ்ரீகணேஷை அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்.
'8 தோட்டாக்கள்' படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.