தமிழ் சினிமா

கலையரசனின் உரு ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது

செய்திப்பிரிவு

கலையரசன், சாய் தன்ஷிகா நடிப்பில் விக்கி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள உரு திரைப்படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சமூக வலைதளத்தில் சமீபத்தில் டீஸர், ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சிறுமுதலீட்டுப் படம் 'உரு'. 'உருவம்' என்பதன் சுருக்கம் தான் 'உரு'. இதற்கு 'பயம்' என்ற அர்த்தமும் உண்டு. முழுக்க முழுக்க பயத்தை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் இந்தத் தலைப்பை தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

பேயே இல்லாமல் பயமுறுத்தும் அம்சத்தை பிரதானமாகக் கொண்ட இப்படத்தில் கலையரசன் எழுத்தாளராக நடித்திருக்கிறார். குடும்ப உறவுகள் குறித்து எழுதிய எழுத்தாளர் மக்களின் ரசிப்புத் தன்மை மாறியதால் தன் மார்க்கெட்டை தக்க வைக்க த்ரில்லர் கதை எழுதுகிறார். ஆனால், அந்தக் கதை எழுதும்போது நிகழும் சில எதிர்பாராத சம்பவங்கள் ஆபத்தை விளைவிக்கிறது. அது என்ன ஆபத்து? எப்படி அதிலிருந்து கலையரசன் மீண்டு வருகிறார் என்பதே 'உரு' படத்தின் கதை.

சமீபத்தில் 'உரு' படத்தின் டீஸரைப் பார்த்து ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உரு திரைப்படம் ஜூன் 16-ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT