தமிழ் சினிமா

தந்தை மறைவால் வாடிய 2 குடும்பங்கள்: 4 குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றார் விஷால்

செய்திப்பிரிவு

கார் மோதி பலியான கூலித் தொழிலாளியின் பிள்ளைகள், சினிமா படப்பிடிப்பின்போது இறந்த ஊழியரின் பிள்ளைகள் என 4 குழந்தைகள் கல்லூரி படிக்கும் வரையிலான கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி (53). இவர் கடந்த ஜூலை 1-ம் தேதி அதிகாலை கூலி வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். தரமணி அருகே ராஜீவ்காந்தி சாலையை கடக்க முயன்றபோது, போதையில் இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மனைவி கோவிந் தம்மாள். இவருக்கு ஆனந்த் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர்.

முனுசாமியின் மறைவுக்கு பிறகு, இக்குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதையறிந்த நடிகர் விஷால், முனுசாமியின் பிள்ளைகளான ஆனந்த், திவ்யா இருவரது கல்விக்கான பொறுப்பை யும் ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் கல்லூரிப் படிப்பு வரை இருவரும் விரும்பிப் படிக்க ஆசைப்படும் படிப் புக்கான மொத்த செலவையும் தனது தேவி அறக்கட்டளை மூலம் செய்வதாக விஷால் அறிவித்துள்ளார்.

இறந்த ஊழியர்

‘கத்தி சண்டை’ படப்பிடிப் பின்போது, போட்டோ ப்ளேட் செல்வம் என்பவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் வறுமையில் வாடியதை அறிந்த விஷால், இறந்த செல்வத்தின் மகன்கள் ஆகாஷ், சந்தோஷின் முழு படிப்பு செலவையும் தனது அறக்கட்டளை மூலம் செய்வதாக அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT