தமிழ் சினிமா

சினிமா வியாபாரத்தை மாற்ற வேண்டும்: இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நேர்காணல்

மகராசன் மோகன்

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களின் வழியே அடுத்தடுத்து கிராமம் மற்றும் நகரப் பின்னணியில் நட்பையும், காதலையும் கலந்து கதை சொன்னவர் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘சத்ரியன்’ திரைப்படம் மூலம் பக்கா ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார். படத்தின் தணிக்கைப் பிரதியை தயார்செய்யும் வேலையில் முழுமூச்சாக இருந்தவருடன் ஒரு சந்திப்பு..

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பலவித மான கேங்ஸ்டர் கதைகள் வந்துவிட்டன. ‘சத்ரியன்’ படமும் கேங்ஸ்டர் களம். இதில் என்ன புதுமையைச் சொல்லப்போகிறீர்கள்?

ஹாலிவுட்டில் வர்ற கேங்ஸ்டர் கதைகள் பெரும்பாலும் சர்வதேச அளவிலான மாஃபியா களமாக இருக்கும். பாலிவுட்டில் பிரபல நிழல் உலக தாதாக்களை மறைமுக மாக சித்தரிப்பார்கள். இந்த ரெண்டையுமே ‘சத்ரியன்’ல பேசல. நம்ம ஊர்ல இருக்குற ஒரு ரவுடி பத்தின கதை. நாம பார்த்து வளர்ந்தவன், கூடவே சுத்திட்டிருந்தவன் கண் முன்னாடி எப்படி ரவுடியா மாறுறான் கிறதுதான் கதை.

மண் மணம், ஆக் ஷன் என்று சுழலும் இந்த திரைக்கதைக்கு விக்ரம் பிரபுவை எப்படி முடிவு செய்தீர்கள்?

விக்ரம் பிரபு நல்ல நடிகர். அவரது நடிப் புத் திறமைக்கு சரியான கதை இதுவரை அமை யலைன்னுதான் நினைக்கிறேன். இந்தப் படத் துல அவர் ஈஸியா நடிச்சிட்டே போய்ட்டார். அப்போதுதான் அவரது திறமை தெரிந்தது. முதல் படமான ‘கும்கி’யிலேயே கதாபாத்திர மாகவே மாறியிருந்தார். பின்னணியில் பெரிய இயக்குநர் இருந்ததால் அது அவரது படமாக பார்க்கப்பட்டது. விக்ரம் பிரபு தனது நடிப்புத் திறமையை காட்ட இது முதல் படியாக இருக்கும் என்பது என் கருத்து. அதேபோல, விக்ரம் பிரபுவின் நாயகியாக நடிக்கும் மஞ்சிமா மோகன், படத்தில் கல்லூரி மாணவியாக வருகிறார். என் முந்தைய படங்கள் போலவே இதிலும் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

வாழ்வியல் சார்ந்த களம், ரவுடி என நகரும் இந்தக் கதைக் களத்துக்கு யுவன்சங்கர் ராஜா எப்படி வந்தார்?

என் 2-வது படத்துலயே யுவனுடன் சேரணும்னு விரும்பினேன். அது முடியாமல் போனது. என்னைப் பொறுத்தவரை, பாடல் இசையைவிட பின்னணி இசை ரொம்ப முக்கியம். எழுத்தில் உள்ளதை விஷுவலில் கொண்டுவர முடியாத நிலையில், பின்னணி இசைதான் அந்த இடைவெளியை நிரப்பும். அதை யுவனின் இசை அழுத்தமாகக் கொண்டுசெல்லும் என்பது என் நம்பிக்கை.

‘சிவப்பு கம்பளம்’ என்ற பெயரில் ஒரு கதை உள்ளது. அதை விரைவில் எடுக்க வேண்டும் என்று சொன்னீர்களே?

என் முதல் படமாக எடுக்கத் திட்டமிட்ட கதை இது. பொதுவாக சிவப்பு கம்பள வரவேற்பு என்பதே பெரிய பதவி, அந்தஸ்தில் இருப்பவர் களுக்குதான் இருக்கும். அந்த தலைப்பை, சிறையில் வாழும் மனிதர்களுக்கு விரித்திருக் கிறேன். இது கம்பியில் நடப்பது போன்றது. அதனால்தான், நாமே தயாரிப்பாளராக மாறி தொடவேண்டும் என்று இருக்கிறேன்.

நீங்களும், சசிகுமாரும் மண் சார்ந்த களத்தில் பயணிக்கிறீர்கள். ‘சுந்தரபாண்டியன் 2’ படத்துக் கான வேலைகளை தொடங்கலாமே?

‘சுந்தரபாண்டியன்’ படத்துக்கு அடுத்தே நாங்கள் இருவரும் சேரலாம் என்ற திட்டம் இருந்தது. அவர்தான், ‘வெளியே போய் ரெண்டு, மூணு படம் பண்ணிட்டு வா. புது அனுபவமா இருக்கும்’ என்றார். சின்ன இடை வேளையும் கிடைத்தது, கண்டிப்பாக திரும்ப வும் சேர்ந்து படம் பண்ணுவோம். ஆனால், அது ‘சுந்தரபாண்டியன் 2’வாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

‘இது இயக்குநர், நடிகர்களின் காலம். அவர்கள்தான் நன்கு சம்பாதிக்கிறார்கள். பணம் போடும் தயாரிப்பாளர்களின் நிலை ரிலீஸுக்குப் பிறகு மோசமாகிவிடுகிறது’ என்ற வேதனைக் குரல்கள் எழுகிறதே..

3 படம் பண்ணியிருக்கிற ஜூனியர் இயக்கு நரான நான் இதுபற்றி கருத்து சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் ஓடி முடிந்த பிறகுதான் வரவு செலவு கணக்கு பார்ப்பார்கள். இன்று படம் திரைக்கு வரு வதற்கு முதல்நாளே எல்லா வரவு செலவை யும் முடித்துவிட வேண்டும் என்ற நிலையில் வியாபாரம் உள்ளது. சினிமா, முதல் நாளே வியாபாரம் நோக்கிச் செல்வதால், ஒரு படத் துக்கு கமர்ஷியல் ஹீரோ, இயக்குநர் தேவைப் படுகிறார்கள். ஆனால், அப்படியான ஹீரோக் கள், இயக்குநர்கள் இங்கு விரல்விட்டு எண் ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். அவர்கள் கிடைக்காதபட்சத்தில், அடுத்தகட் டத்தில் உள்ள இயக்குநர்கள், ஹீரோக்களை தேடி நகர்கிறார் தயாரிப்பாளர். இப்படி நகரும் போது அவர்கள் எதிர்பார்த்த வியாபாரம் நடக்காமல் போனால், தோல்வியோ, பாதிப்போ ஏற்படுகிறது என்பது என் கருத்து. இந்த வியாபார நடைமுறையை தவிர்த்து விட்டு, பழைய சினிமா வியாபார நடைமுறை யைப் பின்பற்றினாலே, நல்ல கதைகள், நல்ல படங்கள் வரும். ரசிகர்களும் ஆர்வத் தோடு வருவார்கள். வியாபாரமும் மீண்டும் நல்லபடியாக நடக்கும் என்று கருதுகிறேன். எல்லா தரப்பினரும் ஒன்றுசேர்ந்தால்தான் இது சாத்தியமாகும்!

SCROLL FOR NEXT