மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் பிராவோ 'உலா' என்ற தமிழ் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
மேற்கிந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருவதால், தமிழக மக்களிடையே இவர் மிகவும் பிரபலம். விக்கெட்களை கைப்பற்றியவுடன் இவர் ஆடிய கங்னம் ஸ்டைல் நடனங்கள் YOUTUBE-ல் ஹிட்.
தற்போது 'உலா' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்திருக்கிறார் பிராவோ. 'உலா' படத்தினை ராஜன் மாதவ் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே சேரன் தயாரித்த 'முரண்' என்ற படத்தினை இயக்கியவர்.
'உலா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதில் பிராவோவும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.