சூர்யா - லிங்குசாமி படத்தின் பணிகள் இந்த வாரம் முதல் துவங்குகிறது.
சூர்யா, சமந்தா நடிக்க, லிங்குசாமி ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். யுவன் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தினை லிங்குசாமியே தயாரிக்கிறார்.
சென்னையில் சூர்யாவின் உடலமைப்பு குறித்து டெஸ்ட் ஷுட் செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த எந்த தகவலுமில்லை.
தற்போது இப்படத்தினை இந்த வாரம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு போட்டோ ஷுட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் லிங்குசாமி.
அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 20ம் தேதி முதல் மும்பையிலும், 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடைபெறவிருக்கிறது.
சூர்யா, சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜாம்வால், ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா 2 கெட்டப்களில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.