விஜய் சேதுபதில் நடிப்பில் உருவாகி வந்த 'கருப்பன்' படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'கருப்பன்' படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வந்த இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்து வந்தார்.
தான்யா நாயகியாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்து வந்தார்கள். இரண்டு கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படியே மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.
இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவற்றை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.