தமிழ் சினிமா

ஹன்சிகா உறவு முறிந்தது: சிம்பு அறிவிப்பு

செய்திப்பிரிவு

நடிகை ஹன்சிகாவுடனான தனது உறவு முறிந்துவிட்டதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:

ஹன்சிகாவுடனான எனது உறவு முறிந்துவிட்டது. தீவிரமாக யோசித்தப்பின் நான் இதை அறிவிக்கிறேன். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஹன்சிகாவுடன் இனி எப்போதும், எந்த உறவும் இல்லை.

கடந்த கால கதைகள் பற்றி நினைத்து நான் வருத்தப்படவும் இல்லை. மீண்டும் மீண்டும் இதைப் பற்றி யாரும் பேசவேண்டாம். நண்பர்கள், உடன் இருப்பவர்கள், ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதை இப்போது அறிவிக்கிறேன். இனி என்னுடைய தொழிலில் தீவிர கவனம் செலுத்து வேன்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதலே பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் படங்கள் சார்ந்த விஷயங்களில் சிம்பு அதிகம் ஈடுபாடு காட்டத் தொடங்கியதும் இந்த பிரிவுக்கு காரணமாக கூறப் படுகிறது. ஹன்சிகா நடிப்பில் தயாராகி வரும் ‘மான்கராத்தே’ படத்தின் டீசரை காதலர் தினத்தில் வெளியிட வேண்டாம் என்பதில் சிம்பு குறியாக இருந்தாராம். அவரின் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அன்றைய தினமே அப்படத்தின் டீசர் வெளியானது.

இதற்கிடையே ஹன்சிகா, தான் நடித்து வரும் ‘உயிரே உயிரே’ படத்தின் படப்பிடிப்புக்கு புதிய நண்பர் ஒருவருடன் வருவ தாகவும் தகவல் கசிந்தது. இப்படி இருவருக்குமான பிரச்சினை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், நடிகை ஹன்சிகா காதலர் தினத்தன்று தனது டிவிட்டரில் ‘என்னைப்போல சிங்கிளாக இருக்கும் எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பல்வேறு பிரச்சினை கள் இருந்த நிலையில் ஹன்சிகாவுடனான தனது உறவு முறிந்ததாக சிம்பு அறி வித்துள்ளார். இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது “நோ கமென்ட்ஸ்” என்று பேச மறுத்து விட்டார்.

SCROLL FOR NEXT