'மான் கராத்தே' படத்தில் இடம்பெறும் கடைசி பாடலை தேவா பாட, அதற்கு சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'. இப்படத்தினை திருக்குமரன் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலை தேவா பாடியிருக்கிறார். படத்தில் இப்பாடலுக்கு சிவகார்த்தியேனோடு அனிருத்தும் இணைந்து ஆடியிருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் சிறந்த பாடலாக அமையும் என்பதில் அனிருத் நம்பிக்கையோடு இருக்கிறார்.
அதுமட்டுமன்றி, இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்கனவே '3' படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பால் இப்பாடலுக்கு மிகக்குறைவான சம்பளமே வாங்கினாராம் ஸ்ருதிஹாசன்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ம் தேதி நடக்கவிருக்கிறது. 'எதிர் நீச்சல்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் - அனிருத் இருவரது இணைப்பில் வெளிவரவிருக்கும் படம் 'மான் கராத்தே'