பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்க அவரது மனைவி மெளனிகா அனுமதிக்கப்பட்டார். இன்று காலை வந்து அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் பாலு மகேந்திரா நேற்று (13/2/2014) காலை காலமானார். பாலு மகேந்திராவுடன் 1998ம் ஆண்டு முதல் வாழ்க்கை நடத்தி வந்தவர் நடிகை மெளனிகா. இதனை 2004ம் ஆண்டு அறிவித்தார் பாலு மகேந்திரா.
இந்நிலையில் பாலு மகேந்திரா மறைவுச் செய்தி கேள்விப்பட்ட மெளனிகாவிற்கு கணவர் உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இயக்குநர் பாலா மற்றும் சிலர் மெளனிகா அங்கு வரக்கூடாது என்று வாதம் செய்தார்கள். இதனால் பரபரப்பு கிளம்பியது.
பாலு மகேந்திராவே தனது மனைவி மெளனிகா என்று அறிவித்த பிறகு ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று செய்திகள் வெளியானது. உடனடியாக சுமூகத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மெளனிகா வந்து பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.