தமிழ் சினிமா

பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் ரீமேக்: படக்குழு இறுதியானது

ஸ்கிரீனன்

'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் நைனிகா நடிப்பது உறுதியாகியுள்ளது.

மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளின் ரீ-மேக்கையும் தானே இயக்கவிருப்பதாக இயக்குநர் சித்திக் கூறி இருந்தார். தமிழில் மம்முட்டி கதாபாத்திரத்தில் ரஜினி, அஜித் உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ரஜினி இப்படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக நிலவி வந்த இப்படத்தின் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடிப்பது உறுதியானது. நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடிப்பது இறுதி செய்யப்பட்டுள்ளது. 'தெறி' படத்தைத் தொடர்ந்து மீனாவின் மகள் நைனிகா ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும்.

தற்போது 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'செல்வா இயக்கும் படம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் அரவிந்த்சாமி, அதனைத் தொடர்ந்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார்.

SCROLL FOR NEXT